கைதான யாழ் நகைக்கடை உரிமையாளரின் மனைவி

யாழ்ப்பாணத்தின் பிரபல நகை கடை உரிமையாளரின் மனைவி 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை பழம் வீதி பகுதியில் நீண்ட காலமாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 36 வயதுடைய குறித்த பெண் நேற்றய தினம் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 80 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட பெண் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்,