(ரவ்பீக் பாயிஸ்) சர்வதேச மனித விற்பனைக்கு எதிரான தினத்தை முன்னிட்டு “மனித விற்பனைக்கு எதிரான விழிப்புணர்வு நடைப்பவணி” எனும் தொனிப்பொருளில் திருகோணமலையில் நடைபவணி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது.
IOM நிறுவனத்தின் அனுசரணையுடன் AMCOR நிறுவனத்தின் வழிகாட்டலில் திருகோணமலை மணிக்கூட்டு கோபுர சுற்று வட்டத்திலிருந்து ஆரம்பமான குறித்த நடைபவனி திருவோணமலை நகர மண்டபம் வரை சென்றடைந்தது.
குறித்த நடைபவணையில் மனித வியாபாரத்திற்கு எதிராக ஒன்றிணைவோம் உயிர்களை காப்போம், மாற்றத்திற்காக நடப்போம் மனித வியாபார வட்டத்தினை உடைப்போம், மனித வியாபாரத்தினை முடிவுறுத்துவோம் வலுப்படுத்துவோம் அறிவூட்டுவோம் கட்டுப்படுத்துவோம், மனித வியாபாரத்தை தடுப்போம் நலிவுற்றவர்களை பாதுகாப்போம் பாதிக்கப்பட்டவர்களை வலுப்படுத்துவோம் மற்றும் விழிப்படைவோம் செயல்படுவோம் மனித வியாபாரத்திற்கு எதிராக நடப்போம் எனும் பதாகைகளை ஏந்தியவாறு பாடசாலை மாணவர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு குறித்த நடைபவனி நகர மண்டபம் வரை சென்றடைந்தது.
திருகோணமலை நகர மண்டபத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இது தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித AMCOR தேசிய தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஸ்தாபகரும் பனிப்பாளருமான முரளிதரன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்…
தற்போதைய காலகட்டத்தில் மனித விற்பனையானது அடிமைத்தனத்தின் ஒரு புதிய நவீன வடிவம் எனவும் பல்வேறு வகைகளில் இவ்வாறான அடிமை வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்
மேலும் பல சந்தர்ப்பங்களில் எமக்கு தெரியாமலேயே இவ்வாறான சந்தர்ப்பம் இடம்பெற்று கொண்டிருக்கின்றது எனவும் இது தொடர்பான சரியான விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியிலும் அரச உத்தியோகத்தர்கள் மத்தியிலும் ஏனைய பொது அமைப்புகளின் பிரதிநிதிகளிடமும் மிகக் குறைவாக காணப்படுவதாகவும் இதற்கான சரியானதொரு புரிதல் இல்லாமல் காணப்படுவதாகவும் இது தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலும் இதனை தடுக்கும் வகையிலும் பல்வேறு வேலை திட்டங்களை எமது அமைப்பின் ஊடாக தொடர்ச்சியாக செய்து வருகின்றோம் என சுட்டிக்காட்டினார்.
அதன் அடிப்படையில் சர்வதேச ஆட்கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் இன்றைய தினம் குறித்த விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த நிகழ்வில் AMCOR நிறுவனத்தின் பிரதிநிதிகள் அரச அரச சார்பற்ற நிறுவனத்தின் பிரதிநிதிகள் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.