(ஏறாவூர் நிருபர் நாஸர்) ஏறாவூர் பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஏற்படுத்தியமை தொடர்பான வழக்கு விசாரணையை அடுத்த ஏழுநாட்களுக்கு இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
அதையடுத்து எதிர்வரும் 21 ஆந்திகதிவரை வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுவதாக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்று அறிவித்துள்ளது. அத்துடன் சந்தேகநபரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மேலதிக நீதிபதியும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியுமான எஸ். அன்வர் சாதாத் கட்டளையிட்டுள்ளார்.
பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்படுத்தியதாக மட்டக்களப்பு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினால் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாக நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏறாவூர்ப் பிரதேசத்திலுள்ள பாடசாலையில் 2019 ஆம் ஆண்டு தரம் ஏழு வகுப்பு பி பிரிவில் கல்விகற்ற மாணவிகள்மீது ஆங்கில பாடம் கற்பித்த ஆசிரியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மட்டக்களப்பு பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினால் ஏலவே நீதிமன்றிற்கு பி அறிக்கை சமர்ப்பித்திருந்தது.
அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த பாடசாலை மாணவிகள், ஆசிரியைகள், அதிபர் மற்றும் பிரதி அதிபர் என முப்பத்தைந்து பேர் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 15 பேரது சாட்சியங்கள் இரண்டு நாட்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.