( ஹஸ்பர் ) ISD ன் நிதிப் பங்களிப்பின்மூலம் மக்கள் சேவை மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கிராமிய ஒத்துளைப்பு குழுக்களை அறிவுரீதியாக வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் வீட்டுத்தோட்டம் செய்வதற்கான விதைப்பொதிகளும் விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் தம்பலகாமம் பிரதேசசெயலாளர் திருமதி.ஜெ. ஸ்ரீபதி தலைமையில் பாலம்போட்டாறு பத்தினிபுரம் கிராமத்தில் இன்று 3.8.2023 நடைபெற்றது
இந்நிகழ்வின் ISD நிறுவனத்தின் திட்டமுகாமையாளர் திரு ஜனார்த்தனன், பத்தினிபுரம் பாடசாலை அதிபர் EDO,AI, PSCஇணைப்பாளர் கு.பிரகலாதன் மக்கள் சேவைமன்ற உத்தியோகஸ்தர்கள் VSF அமைப்பினரும் கலந்துசிறப்பித்தனர்.VSF அமைப்பினரால் DS ன் சேவையினை கௌரவப் படுத்தும் முகமாக பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார் இதில் ISD ன் இலங்கைக்கான திட்டமுகாமையாளரும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.