சம்மேளன தலைவர் கலாபூஷணம். மீரா எஸ்.இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில். சம்மேளன அங்கத்தவர்கள் துணைவிமார் குழந்தைகள் உட்பட இன்னும் பலர் இங்கு கலந்து கொண்டனர்.
தலைமையுரையை கலாபூஷணம் மீரா இஸ்ஸதீன் நிகழ்த்த சம்மேனனம் கடந்து வந்த பாதையில் எதிர்கொண்ட சவால்குறித்து கலாபூஷணம் ஏ.எல்.எம்.சலீம் நினைவுறுத்தினார்.
காலநிலை தொடர்பாக தேசிய ரீதியாக இடம்பெற்ற போட்டியில் சாதனை படைத்த மின்மினி மின்னாவுக்கு ஓய்வு நிலைடாக்டர் .திருமதி சலீம் பொன்னாடை போர்த்தி பொற்கிழியும் வழங்கினார்.
சம்மேளன அங்கத்தவர்களுக்குரிய ரீசேட்களை வழங்கி உதவிய மீரா அலிரஜாய் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இங்கு சிறுவர் பெரியோருக்கான சங்கீதக்கதிரை இன்னும்பல விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றதோடு பரிசில்களும் வழங்கப்பட்டன.
முழுநாள் நிகழ்வாக இடம்பெற்ற இந்நிகழ்வின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் சம்மேளன செயலாளரும் பத்திஎழுத்தாளரும் ஊடகவியலாளருமான எம்.எம்.ஏ.சமட் நன்றி கூறினார்.
எதிர்வரும் காலங்களில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் ஒவ்வொரு இடத்திலும் சம்மேளன குடும்பஉறுப்பினர்கள் ஒன்று கூடுவதென தீர்மானம் நிறைவேறியது.