அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில்
சம்மாந்துறை ஆகிய இரு பிரதேச செயலகக்கிளைகளில் இத்திட்டம் மிகச்சிறப்பாக முன்னெடுக்கப்படுகிறது.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் இணையத்தளத்திற்கு நிகழ்நிலை மூலம் விண்ணப்பித்து திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்தபின்னர் பிரதேச செயலகத்திற்கு வருகை தரும் விண்ணப்பதாரர்களுக்கு மாத்திரம் கைவிரல் அடையாளங்கள் இங்கு பெற்றுக்கொள்ளப்படுகின்றன.
இத்திட்டத்தின் மூலம் மக்கள் அதிக பயனைப்பெற்று வருகின்றனர்.கொழும்பு சென்று ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து நேர காலத்தை வீணடிக்கும் செயலுக்கு இத்திட்டத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
|