திருக்கோவில் பிரதேசத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்ட பாரிய கடலரிப்பை கட்டுப்படுத்துமுகமாக பாரிய கருங்கற்கள் போடப்பட்டுள்ளன.
குறிப்பாக திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தின் முன்புறம் உள்ள கடற்கரைப் பகுதியில் இக் கருங்கற்கள் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் போடப்பட்டுள்ளன.
இதேவேளை ஆலய வருடாந்த ஆடி அமாவாசை உற்சவம் கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தற்போது திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
ஆகஸ்ட் 16 ஆம் தேதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் திருவிழாவிற்கு செல்வோர் குழந்தைகளை கடற்கரை பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டாம் என ஆலய நிர்வாகமும் பொலிசாரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தீர்த்தம் ஆடும் வேளையில் மிகவும் அவதானமாக கவனத்துடன் செயற்படவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.மீறினால் ஆபத்தை சந்திக்க வேண்டி நேரிடும் என்று எச்சரிக்கை இடப்பட்டுள்ளது.