கிராமிய ஆடு வளர்ப்புத் திட்டத்தின் ஆடுகள் கையளிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கிராமியப் பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தினூடாக காத்தான்குடி பிரதேசத்தில் ஆடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு, பிரதேச செயலாளர் யு. உதயஸ்ரீதரின் ஆலோசனைக்கு இணங்க உதவிப் பிரதேச எம்.எஸ்.சில்மியா தலைமையில் செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

இதன்போது காத்தான்குடி பிரதேச செயலக பிரிவின் 167A, 167B ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த இரண்டு பயனாளிகளிடம் தலா மூன்று ஆடுகள் வீதம் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கால்நடை வைத்திய அதிகாரி எஸ். டி. எம்.மாஹிர், பிரிவிற்கு பொறுப்பான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம். எம். எம். இர்ஷாத், மற்றும் கலீல்தீன், திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்களான எம்.ஏ.எம்.நலீம், ராதிகா கோமதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.