துறைநீலாவணை தமிழரசுக்கட்சியின் வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில் கறுப்பு யூலை தின நிகழ்வு இன்று மாலை துறைநீலாவணையில் வட்டாரக்கிளையின் தலைவர் த.கணேசமூர்தி தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது யூலைக்கலவரத்தில் உயிர் நீத்தவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அம்பாரைமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன் ஞா.சிறிநேசன் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் காரைதீவுப் பிரதேசசபை தவிசாளர் கி.ஜெயசிறில் தமிழசுக்கட்சியின் இளைஞர் அணித்தலைவர் கி.சேயோன் உட்பட தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.