திருகோணமலை வனப்பகுதியில் திடீர் தீப்பரவல்

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நான்காம் கட்டை பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக சுமார் 30 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது.

இன்று (29) நண்பகல் குறித்த பிரதேசத்தில் குடியிருப்புகள் மற்றும் பாடசாலையை அன்மித்த வனப்பகுதியிலேயே திடீரென இவ் தீப்பரவல் பரவியதாகவும் குறித்த வனப் பகுதி ஆண்டாங்குளம் பிரதேசத்தில் இருந்து நான்காம் கட்டை வரைஇவ்வாறு தீக்கிரையானதாக தெரிவிக்கப்படுகின்றது

குறித்த தீப்பரவளை திருகோணமலை மாநகர சபையின் தீயணைப்பு படை மற்றும் இராணுவத்தினருடன் இணைந்து பொதுமக்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் குறித்த தீ பரவல் தொடர்பில் திருகோணமலை உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.