போதைப்பொருள் பாவனை தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வு

சமுதாய சீர்திருத்த திணைக்களத்தினால் “கட்டளையாளர்களுக்கான போதைப்பொருள் பாவனை தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வு” தம்பலகாமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி வழிகாட்டலுக்கு அமைய இச்செயலமர்வு இடம்பெற்றது.

போதைப் பொருள் பாவனை தடுப்பு தொடர்பாகவும், சிறைத்தண்டனையிலிருந்து சமுதாய சீர்திருத்த செயற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதுடன் தேவையான வழிகாட்டுதல்களும் இதன் போது வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் மதகுருமார்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப், நிர்வாக உத்தியோகத்தர் உடகெதர , பொலிஸ் உத்தியோகத்தர்,சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் உதார சம்பத், சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் பா.ஹம்சபாலன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் அனஸ் உட்பட கட்டளையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.