இலங்கை வலைப்பந்தாட்ட அணி தென் ஆபிரிக்கா பயணம்

16வது உலக கிண்ண வலைப்பந்தாட்ட போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை பெண்கள் வலைப்பந்தாட்ட அணி இன்று தென் ஆபிரிக்கா நோக்கி பயணமானது.

இப் போட்டி தென் ஆபிரிக்காவின் கேம்டவுந்தி நகரத்தில் இடம்பெறவுள்ளது.

1963 ஆம் ஆண்டு ஆரம்பமான உலக கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டி இவ்வருடம் 16 வது தடவையாக இடம்பெறவுள்ளது.

நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா, ஜமேகா , இங்கிலாந்து, உகண்டா, இலங்கை, சிங்கப்பூர், டொன்கோ, பீஜி, மலாவி, சிம்பாபே, டொபேகோ, தென் ஆபிரிக்கா, வேல்ஸ் ஆகிய நாடுகள் 4 குழுக்களாக பங்கேற்கவுள்ளன.
இலங்கை அணி “சீ” குழுவில் ஜமேக்கா, தென் ஆபிரிக்கா , வேல்ஸ் ஆகிய நாடுகளுடனான போட்டியில் கலந்து கொள்ளும்.

முதற் போட்டியில் ஜமேக்கா அணியை இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.