உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

திருகோணமலை மாவட்டம், குச்சவெளி பிரதேச செயலகத்திற்குற்பட்ட கிராம சேவையாளர்கள் பிரிவில் இருந்து தற்பொழுது பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட 40 வறிய குடும்பங்களுக்கு ரூபா 15,000.00 பெறுமதியான காசோலை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த காசோலை வழங்கும் நிகழ்வு இன்று(28 )குச்சவெளி பிரதேச செயலக கலச்சார மண்டபத்தில் வைத்து பிரதேச செயலாளர், திட்டமிடல் உதவிப்பணிப்பளர் மற்றும் லீட்ஸ் நிறுவன உத்தியோகத்தர்களினால் வழங்கி வைக்கப்பட்டது, உலர் உணவு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக குறித்த வவுச்சர் வழங்கப்பட்டன.

இதற்கான நிதி அனுசரனையினை வெப்டிஸ்ட் சங்கத்தினரின் உதவியோடு லீட்ஸ் நிறுவன அனுசரனையில் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் குச்சவெளி பிரதேச செயலாளர் கே.குணநாதன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் நாசிக்,லீட்ஸ் நிறுவன உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம்.தஸ்லீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.