கல்முனை கார்மல் பற்றிமாக் கல்லூரி தேசிய பாடசாலைக்கு கொமேசியல் வங்கியின் பங்களிப்புடன் 13 வருட உறுதிப் படுத்தப்பட்ட கல்வி நிகழ்ச்சித் திட்டத்திற்காக ஸ்மார்ட் வகுப்பறை (Smart Classroom) உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று (28) இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் எஸ்.ஈ.ரெஜினோல்ட் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்முனை கொமேசியல் வங்கி கிளையின் அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.