போதகர் வங்கி கணக்கில் பில்லியன் கணக்கில் பணம்

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் 11 வங்கிக் கணக்குகளை ஆராய்ந்ததில் மொத்தம் 12.2 பில்லியன் உள்ளதாக, உயர் நீதிமன்றத்தில் இன்று (28) தெரிவிக்கப்பட்டது.

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நவான இதனைத் தெரிவித்துள்ளார்.

வண. எல்லே குணவன்ச தேரர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று (28) காலை இடம்பெற்றபோதே குறித்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.