(எருவில் துசி) எருவில் கிராம மக்களினால் வருடா வருடம் நடைபெறுகின்ற தாந்தாமலை திருவிழாவினை முன்னிட்டு எருவில் கிராமத்திலிருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதயாத்திரையாக சென்று இருந்தார்கள். இவ்வாறு சென்றிருந்த நிலையில் தாந்தா மலை குளத்தில் இளைஞர்கள் நீராடுவதற்காக சென்ற வேளை எருவிலை சேர்ந்த மோகன் கதீஷ் என்கின்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
குறித்த இளைஞனை மகிழயடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இளைஞனின் நிலை கவலைக்கிடமாக காணப்பட்டதால் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் மாற்றப்பட்ட வேளையிலே மட்டக்களப்பு வைத்தியசாலையில் இளைஞன் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொக்கட்டுச்சோலை பொலிசார் மேற்கொள்வதும் குறிப்பிடத்தக்கது.