சாணக்கியனை போடா என பேசிய பிள்ளையான் – கூட்டம் அமளிதுளியில் முடிவு

(கனகராசா சரவணன்)

நேற்று இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தனியார் போக்குவரத்து சேவையில் சட்டவிரோதமாக அனுமதிபத்திரமின்றி சேவையில் ஈடுபடும் சச்சின் ரவல் பஸ்வண்டி தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு நா.உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிய நிலையில் அவரை பார்த்து மாவட்ட அபிவிருத்திகுழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சி.சந்திரகாந்தன் போடா என காட்டமாக தெரிவித்ததையடுத்து அங்கு அமளி துமளி ஏற்பட்டது.

இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் தலைமையில் இடமபற்றமாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹ்மத், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், நா.உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரன், இரா.சாணக்கியன், மாவட்ட அரசாங்க அதிபர் பத்மராஜா கலாமதி, மற்றும் திணைக்கள பணிப்பாளர்கள் அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது ஆளுநர் மயிலத்தமடு மாதவனை மேச்சல் கால்நடைகளின் மேச்சல் தரைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தார் இதனை தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வாகரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தமிழ் மன்னர்களின் வரலாற்றை குறிக்கும் தொல்லியல் பகுதியான குளத்தை சட்டவிரோதமாக மணல் அகழ்வும் வீடியோ காட்சியை ஏனையவர்கள் பார்ப்பதற்காக புரயெக்டரில் போடுமாறு தெரிவித்த போது அங்கு பிள்ளையானுக்கும் வியாழேந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் அமைச்சர் அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹ்மத் தற்போது காத்தான்குடி கல்வி அதிகாரியை மாற்றியது மற்றும் ஏறாவூரிர் நகரசபை குப்பைகளை கொட்டுவதற்கான இடம் தொடர்பாகவும் கடந்த காலத்தில் கிழக்கு முதலமைச்சாரக இருக்கும் போது கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு கொள்வனவு செய்து கொடுத்த வாகனத்தை எவ்வாறு தற்போதைய ஆளுநர் பாவிக்க முடியும் எனவும் ஒரு குழு அமைக்க வேண்டும் என தெரிவித்தார்

இதன் போது குறுக்கீடு செய்த நா.உ.கோ.கருணாகரன் இந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் உங்களுடைய தனிப்பட்ட பிரச்சனை கதைப்பற்கு இங்குவரவில்லை அப்படியென்றால் நாங்கள் வெளியெறுவதாகவும் இந்த குழுவை எக்காரணம் கொண்டும் நாங்கள் அனுமதிக்க முடியாது இந்த அபிவிருத்தி கழு கூட்டத்தை துஸ்பிரயோகம் செய்வதாக பேசிய நிலையில் ஈரா.சாணக்கியன் தனியர் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சச்சின் ரவல் சட்டவிரோதமாக அனுமதிபத்திரத்தை மீறி சேவையில் ஈடுபடுவதாக ஆளுநரிம் தெரிவித்ததையடுத்து குறக்கீடு செய்த பிள்ளையான் வாதத்தில் ஈடுபட்ட நிலையில் பேடா என சாணக்கியன் மீது காட்டமாக தெரிவித்ததையடுத்து சாணக்கியனுக்கும் பிள்ளையபனுக்கும் இடையோ வாக்குவாதத்தையடுத்து அங்கு அமளிதுமளி ஏற்பட்டது.

இந்த வாக்குவாத்தையடுத்து ஆளுநர் வேறு ஒரு கூட்டத்திற்கு செல்வதற்காக அங்கிருந்து வெளியேறிய நிலையில் தொடர்ந்தும் நா.உறுப்பிர்களுக்கிடையே வாக்குவாதத்தையடுத்து அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்க வேண்டிய சில தீர்மானங்கள் சரியாக எடுக்கப்படாமல் கூட்டம் முடிவுக்குவந்ததையடுத்து அங்கிருந்து வெளியேறினர்.