அண்மையில் வெளியாகிய கிழக்கு மாகாண ஆங்கில டிப்ளோமா ஆசிரியர் நியமனத்திற்கான திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகப் பரீட்சைக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கும் பரீட்சார்த்திகளுக்கான விஷேட பயிற்சிபட்டறையொன்றை கல்முனையன்ஸ் போரம் அண்மையில் ஏற்பாடுசெய்திருந்தது.
கமு/கமு/அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஓட்டமாவடி தொடக்கம் அக்கரைப்பற்று வரையான பிரதேசங்களிலிருந்து நேர்முகப்பரீட்சைக்காக தெரிவுசெய்யப்பட்ட பரீட்சார்த்திகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
இப்பயிற்சிபட்டறையில் குறித்த நேர்முகப் பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான வழிமுறைகளும், பயிற்சிகளும் அனுபவமிக்க வளவாளர்களைக் கொண்டு வழங்கப்பட்டதோடு மாதிரி நேர்காணலும் (Mock Interviews) நடாத்தப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டது விஷேட அம்சமாகும்.
கடந்த 2020ம் ஆண்டு நடாத்தப்பட்ட மேற்படி திறந்த போட்டிப் பரீட்சைக்கான வழிகாட்டல் வகுப்புக்களை கல்முனையன்ஸ் போரம் இலவசமாக ஏற்பாடு செய்திருந்ததோடு குறித்து வழிகாட்டல் வகுப்புக்களில் கலந்துகொண்ட 11 மாணவர்கள் தேர்வில் சித்திடைந்து நேர்முகப்பரீட்சைக்கு தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.