இந்தியாவில் இருந்து காதலனை தேடி மட்டக்களப்புக்கு வந்த யுவதி

இந்தியாவின் தமிழ் நாடு, வேலூரைச்சேர்ந்த 32 வயதுடைய இளம் யுவதி தனது காதலனைத்தேடி மட்டக்களப்பு, ஓட்டமாவடிக்கு வந்த சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த ஏழு வருடங்களாக கத்தாரில் பணி புரிந்து வந்த நேரத்தில் இருவருக்குமிடையில் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவரையே கரம் பிடிக்கும் நோக்கில் இலங்கை வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது விடயம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.