நிந்தவூரில் மீன்களில் கடல் மண் கலப்படம் -வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(அஸ்ஹர் இப்றாஹிம்)

கல்முனை நிந்தவூர் பிரதேசத்தில் மீன்களில் கடல் மண் கலப்படம் செய்து விற்பனை செய்து வந்த வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில் மீன் விற்பனையில் ஈடுபடுவோர் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் பணிப்புரைக்கமைய நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம்.றயீஸ் வழிகாட்டலில் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் மீன்களின் தன்மையை புதிதாகக் காட்டுவதற்காகவும் நிறையில் மோசடி செய்வதற்காகவும் கடல் மண் கலப்படம் செய்து விற்பனை செய்துவந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.