மீனவர்கள் அத்துமீறல் தொடர்பில் இந்திய பிரதமரை சந்திக்கவுள்ள அமைச்சர் டக்லஸ்

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது கடற்றொழிலாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வொன்று கிடைக்கும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும், அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ள நிலையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது, கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. குறித்த பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டதுடன் அது தொடர்பான கோரிக்கை கடிதங்களும் அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.