இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாநாடு நடத்த விசேட குழு நியமனம்.

இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் மாகாநாடு மற்றும் விடுபட்ட வட்டார, பிரதேச, தொகுதி, மாவட்ட கிளைகளை விரைவாக செய்வதற்கும் கடந்த (08/07/2023) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மத்திய குழுக்கூட்டத்தில் கட்சிதலைவர் மாவை சேனாதிராசாவால் பெயர் குறிப்பிட்டு 18, பேர் அடங்கிய குழுவை நியமித்துள்ளார்.

அது தொடர்பான கடிதங்களை இன்று (18/07/2023) பதில் பொதுச்செயலாளர் மருத்துவர் சத்தியலிங்கம் அனுப்பியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள 18, பேர் விபரம்.

1)சி.வி.கே.சிவஞானம், தலைவர், யாழ்ப்பாணம்
2)ப.சத்தியலிங்கம், பதில் பொதுச்செயலாளர்.வவுனியா
3)எம்.ஏ.சுமந்திரன் பா.உ யாழ்ப்பாணம்
4)சி.சிறிதரன் பா. உ கிளிநொச்சி
5)சாள்ஷ் நிர்மலராஜன் பா.உ மன்னார்.
6)த.கலையரசன் பா.உ அம்பாறை
7)இ.சாணக்கியன் பா.உ மட்டக்களப்பு
8)பா.அரியநேத்திரன் மு.பா.உ மட்டக்களப்பு
9)க.கோடீஷ்வரன் மு.பா.உ அம்பாறை
10)குகதாசன் திருமலை
11)இராசநாயகம் திருமலை
12)கே.வி. தவராசா சட்டத்தரணி கொழும்பு
13)இரத்தினவடிவேல் கொழும்பு
14)திருமதி மதினி மகளீர் அணி தலைவி
15)சுரேன் வாலிபர் அணி செயலாளர்.

இவர்களுடன்
கட்சி தலைவர் மாவை சேனாதிராசா
நிர்வாக செயலாளர் குலநாயகம்
பொருளாளர் கனகசபாபதி

ஆகியோரும் இணைந்து மொத்தம் 18, பெயர்களை கட்சி தலைவரின் அதிகாரத்தை பயன்படுத்தி மத்தியகுழு கூட்டத்தில் தலைவர் மாவை சேனாதிராசா அறிவித்தார்.

இவர்கள் பின்வரும் கடமைகளை உடனடியாக செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
1. சகலமாவட்டங்களிலும் கட்சியின் நிர்வாக கட்டமைப்பை மீள் அமைப்பதற்கு அல்லது மறு சீரமைப்பதற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் கூடி செயல்படுதல்.
2. நிர்வாக கட்டமைப்பு நிறைவுற்றதும் தேசிய மகாநாட்டிற்கான ஆயத்தப்பணிகளை (நிதி மற்றும் சகல விடயங்கள் உள்ளடங்கலாக) செய்து எதிர்வரும் ஐப்பசி 2023, முடிவதற்கு முன்னம் தேசிய மாநாடு நடத்தப்பட வேண்டியுள்ளதால் அதற்கான பொதுச்சபை பிரதிநிதிகளை சகல தொகுதிகளிலுமிருந்து மாநாடு நடத்தப்படும் ஒரு மாதத்திற்கு முன் மாவட்ட கிளைகள் பொதுச்செயலாளருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இந்தகுழு தமக்குள் கலந்துரையாடி வடக்கு கிழக்கு கொழும்பு உட்பட சகல மாவட்டங்களிலும் நடவடிக்கையை எடுக்குமாறு அந்த கடிதத்தில் பதில் பொதுச்செயலாளர் மருத்துவர் சத்தியலிங்கம் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.