சிறப்பாக நடைபெற்ற உகந்தை மலை முருகன் ஆலய ஆடிவேல் விழா கொடியேற்றம்!

( வி.ரி.சகாதேவராஜா)   வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தை மலை  முருகன் ஆலய வருடாந்த ஆடி வேல் விழா  உற்சவத்தின் முதல் நாள் கொடியேற்றம் நேற்று முன்தினம் (18) செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
காலை 10.30 மணியளவில் வசந்த மண்டப சிறப்பு பூஜையையடுத்து ஆலய வண்ணக்கர் டி.எம்.சுதுநிலமே திசாநாயக்க கொடிச்சீலையை சிரசில் வைத்து தாங்கிவந்தார்.
சுமார் ஆயிரம் அடியார்களின் அரோகரா கோசம் விண்ணைப் பிளக்க சரியாக 11.20 மணியளவில் கொடி ஏற்றப்பட்டது.
கொடியேற்றத்திருவிழா ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
 ஆடிவேல் விழா உற்சவம் தொடர்ந்து 13 நாட்கள்  இடம்பெற்று ஆகஸ்ட் 02ஆம் தேதி தீர்த்த உற்சவத்துடன் நிறைவடைய இருக்கின்றது.
வழக்கம்போல அன்னதானம் மற்றும்  பஸ் போக்குவரத்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இம்முறை கதிர்காமம் உற்சவம் முன்கூட்டியே நிறைவடைந்திருப்பதால் உகந்தமலை முருகன் ஆலய ஆடிவேல்விழா மிகவும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.