காரைதீவில் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்த சம்மாந்துறை.

(வி.ரி.சகாதேவராஜா)   காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக் கழகமும் விபுலாநந்தா சனசமூக நிலையமும் இணைந்து நடாத்திய அமரர்களான திரு, திருமதி மகாலிங்கசிவம் ஞாபகார்த்த T10 கடினபந்து கிரீக்கட் சுற்றுப்போட்டியில் சம்மாந்துறை அணி வெற்றி வாகை சூடி வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
இச் சுற்றுப் போட்டியில் 32 கழகங்கள் விலகல் முறையில்  கடந்த இரண்டு மாதங்களாக பங்கு காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் பங்கு பற்றி வந்தன.
இறுதி போட்டிக்கு சம்மாந்துறை அணியும் சாய்ந்தமருது பிளாஸ்ரர் அணியும் மோதின.  இந்த மாபெரும் இறுதிப்போட்டியானது கழக தலைவர் தம்பிராசா தவக்குமார் தலைமையில் நேற்று முன்தினம் (17) ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாக நடந்தேறியது. இறுதி போட்டியில் பிரதம அதிதியாக மகாலிங்கசிவம் அசோக்  கலந்து சிறப்பித்தார்.
  கௌரவ அதிதிகளாக கழகப் போசகர்களாகிய வி..இராஜேந்திரன் , வி.ரி. சகாதேவராஜா  ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.  இந்த மாபெரும் இறுதி போட்டியில் சாய்ந்தமருது Blaster அணியை எதிர்த்து சம்மாந்துறை SSC அணி மோதியிருந்தது.
 நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற SSC அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. அதனடிப்படையில் 10 ஓவர்கள் முடிவில் SSC ச சமய பஅணியானது 109 ஓட்டங்களை பெற்றது.
110 என்ற சவால் மிக்க இலக்கினை அடையும் நோக்கில் களமிறங்கிய Blaster அணி 10 ஓவர்கள் முடிவில் 84 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதனடிப்படையில் SSC அணியானது 26 ஓட்டங்களினால் வெற்றி வாகை சூடியது.
முதல் பரிசாக 30ஆயிரம் ரூபாவும் பாரிய வெற்றிக் கிண்ணமும் றண்ணஸ் அப் இரண்டாம் பரிசாக 20 ஆயிரம் ரூபாவும் வெற்றிக் கிண்ணமும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.
 ஏனைய பவர்பிளே கௌரவ அணி மற்றும் சிறப்பு வீரர்களுக்கும் நடுவர்களுக்கும் பணப்பரிசும் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
கழகச் செயலாளர் எஸ்.கிருஷாந்த் நன்றி உரையாற்றினார்.