மன்னாரில் சிறப்புடன் இடம்பெற்ற நடன பயிற்சிப்பட்டறை.

(வாஸ் கூஞ்ஞ)   நடனத்துறையில் ஆர்வம் உள்ள இளைஞர் யுவதிகளின் திறமையை மெருகேற்றும் விதமாக மாவட்ட ரீதியாக உள்ள சிறுவர்,சிறுமியர்,இளைஞர் யுவதிகளை ஒன்றினைத்து இரண்டு நாள் நடன பயிற்சி பட்டறை  சனிக்கிழமை (15) மற்றும்  ஞாயிற்றுக்கிழமை (16) இரண்டு தினங்கள் மன்னார் வங்காலை டான்ஸிங் டைமன்ஸ் நடன பயிற்சி கல்லூரியில் இடம் பெற்றது.

மன்னார் டான்ஸிங் டைம்மன்ஸ் பயிற்சி கல்லூரியின் ஒழுங்கமைப்பில் அதன் நிறுவனர் அர்ஜூன் லெம்பேர்ட்இ ரஞ்சித்இநிருஸிஇ எவரஸ்ரா ஆகிய நடன ஆசிரியர்கள் இணைந்து குறித்த நடன பயிற்சி பட்டறையை நடத்தியிருந்தனர்

மன்னார் மாவட்ட முழுவதும் இருந்து சுமார் 50 க்கு மேற்பட்டவர்கள் குறித்த பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டனர்

றநளவநசnஇஉடயளளiஉயடஇகுழடம ஆகிய நடனங்களுக்கான பயிற்சிகள் மேற்படி பயிற்சிபட்டறை ஊடாக தெளிவுபடுத்தப்பட்டதுடன்  தொடர்சியாக மன்னார் மாவட்டத்தில் உள்ள வெவ்வேறுபிராந்தியங்களில் குறித்த பயிற்சி பட்டறைகள் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.