(கனகராசா சரவணன்)
இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து விசா இன்றி 2 வருடங்களாக வாழ்ந்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை மட்டக்களப்பு நகரில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய நிலையில் இன்று சனிக்கிழமை (15) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
தமிழ்நாடு சின்ப்பள்ளிகிராமம் கம்பள்ளி பேஸ்ட் கிருஷ;ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த செல்லப்பன் செல்வதுரை என்ற நபர் கடந்த 2021ம் ஆண்டு சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்த நிலையில் யாழ்ப்பாணம் கைலாசர்பிள்ளையர் கோவில் பகுதியில் தங்கிருந்துள்ளார்.
இவர் சம்பவதினமான இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு நகர்பகுதிiயில் மட்டக்களப்ழபைச் சேர்ந்த நண்பர் ஒருவருடன் சத்தேகத்திற்கு இடமாக நடமாடிய நிலையில் இருவரையும் கைது செய்து விசாரணையின் போது விசா இன்றி கடந்த 2 வருடங்களாக தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசர் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.