தாய்லாந்தில் தங்கம் வென்ற கம்பளை சுதாகரன்

(வி.ரி.சகாதேவராஜா)

தாய்லாந்தில் 2023.07.11 அன்று நடைபெற்ற ஆசிய ‘வூசு’ (WUSHU) போட்டியில் மத்திய மாகாணம், கண்டி மாவட்டத்துக்குட்பட்ட கம்பளையைச் சேர்ந்த கணேசன் சுதாகரன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

கம்பளையைச் சேர்ந்த அதிபர்களான கணேசன் புவனேஸ்வரி தம்பதியினரின் இரண்டாவது புத்திரன் சுதாகரன் ஈட்டிய கடல் கடந்த தெற்காசிய சாதனை தொடர்பாக பாராட்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது .