கல்முனையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வலது குறைந்த பயனாளிகளுக்கு இருசக்கர நாற்காலிகள் வழங்கிவைப்பு

கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனுக்கு கிடைக்கபெற்ற கோரிக்கைகளுக்கு அமைவாக வை.டபிள்யூ.எம்.ஏ. மற்றும் ரஹ்மத் பவுண்டேஷன் இணைந்து கல்முனைப் பிராந்தியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வலது குறைந்த பயனாளிகளுக்கு இருசக்கர நாற்காலிகள் வழங்கி வைக்கப்பட்டன.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களினால் மேற்படி இருசக்கர நாற்காலிகள் வழங்கி வைக்கப்பட்டன.