களனி பல்கலைக்கழகத்தில் பாலின வேறுபாடுகளுக்கான சர்வதேச மாநாடு.

(அஷ்ரப் ஏ சமத்)   களனி பல்கலைக்கழகத்தில் பாலின வேறுபாடுகளுக்கான சர்வதேச மாநாடு கொழும்பு ரமடா ஹோட்டலில்  களனி பல்கலைக்கழகத்தின் பாலின ஆய்வு மையத்தின் ஏற்பாட்டில்  நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம பேச்சாளராக களனி பல்கலைக்கழகததின் பேராசிரியையும் பாலின ஆய்வு மையத்தினை ஸ்தாபித்த மைத்திரி விக்கிரசிங்க உரையாற்றினார்.
இந் நிகழ்வுக்கு 70 க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. உள்நாட்டு வெளிநாட்டு ஆய்வாளர்கள், மற்றும பட்டதாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பாலினம் நிலையானதன்மை, அபிவிருத்தி கல்வி சுறறுச சூழல்  காலநிலை, மாற்றம். தொழில்நுடப்ம், கண்டுபிடிப்பு ஆன் பெண் வேறுபாடு சமத்துவம் பாலியல் பற்றிய விரிவரைகளை அத்துறையில் தேர்ச்சிபெற்ற கல்வியலாளர்கள் விரிவுரையாற்றினார்கள்.
கலாநிதி அனுசா எதிரிசிங்க, களனிபல்கலைக்கழகத்தின் உபவேந்தர் நிலந்தி டி. சில்வா. பிரதம பேச்சாளர் சிரேஸ்ட பேராசிரியை மைத்திரி ரணில் விக்கிரமசிங்க, பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழுவின் உப தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் சந்தன பி. உடவத்த, கௌரவ அதிதி  அசுசா குப்டா, மற்றும்  ஏற்பாட்டாளர்கள் சர்வதேச மாநாட்டின் விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.