வீதிக்கிறங்கிய கல்முனை சட்டத்தரணிகள்

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் விமர்சித்து அன்னையின் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை நீதித்துறையை அவமானப்படுத்தும் ஒரு செயற்பாடாகும் என தெரிவித்து கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு பேரணி கல்முனை நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்னால் இன்று (11) இடம்பெற்றது.

நீதிமன்ற கட்டிடத்தின் முன்னாள் ஒன்று கூடிய சட்டத்தரணிகள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பி பதாகைகளை தாங்கியவாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். பாராளுமன்ற உறுப்பினருக்கு சிறப்புரிமை இருக்கிறது என்பதற்காக நீதிபதிகளையும் நீதிமன்றத்தையும் விமர்சிக்கும் அருகதை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இல்லை. இவரது உரையை நாம் கண்டிக்கிறோம் என கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் எம்.ஐ.றைசுல் ஹாதி இங்கு தெரிவித்தார்.

இந்த எதிர்ப்பு பேரணியில் பிராந்தியத்தில் உள்ள தமிழ் – முஸ்லிம் சட்டத்தரணிகள் பலர் கலந்து கொண்டனர்.