மல்வத்தையில் வரலாறு கண்காட்சி

“வரலாறு வாழ்வோடு இணைந்தது”எனும் தொனிப்பொருளிலான பாடசாலைமட்ட கண்காட்சி மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்றது.

பாடசாலை அதிபர் திருமதி கௌசல்யா ஞானேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி. சகா தேவராஜா கலந்து சிறப்பித்தார்.

இதன்போது பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறன்கள் காட்சிப்படுத்தப்பட்டன.இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட சமூகவிஞ்ஞான துறையின் ஆசிரியை வினோ , பங்குபற்றிய மாணவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.