முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சின் செயலாளராக பணியாற்றிய அ. உமாமகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய க.விமலநாதன் ஓய்வு பெற்றதனால் நிலவிய வெற்றிடத்திற்கு புதிய அரசாங்க அதிபராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான அ. உமாமகேஸ்வரன் திருகோணமலை, கொழும்பு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றியவர்.
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் , குச்சவெளி ஆகிய பிரதேசங்களின் பிரதேச செயலாளராகவும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராகவும் வடக்கு மாகாண பிரதிப் பிரதமசெயலாளராகவும் கடமையாற்றிய அருளானந்தம் உமாமகேஸ்வரன் இறுதியாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நியமனத்திற்கு சர்வதேச இந்துமத பீட செயலாளரும் முன்னாள் ஜனாதிபதியின் இந்து மத விவகார இணைப்பாளருமான கலாநிதி சிவ ஸ்ரீ இராமசந்திர குருக்கள் பாபு சர்மா தனது வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவித்துள்ளார்.