இருநூறு வருடங்கள் தொன்மை வாய்ந்த காரைதீவு பூமிதேவி ஸ்ரீதேவி சமேத ஸ்ரீமன் நாராயணன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம் இன்று (7) வெள்ளிக்கிழமை கருமாரம்பத்துடன் ஆரம்பமாகின்றது.
நாளை 8ம் தேதி சனிக்கிழமை காலை முதல் எண்ணைய்க் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும்.
நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஒன்பதாம் தேதி மகா கும்பாபிஷேகம் காலை 9 மணியளவில் கிழக்கின் பிரபல சிவாச்சாரியார் சிவாச்சார்யதிலகம் சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையில் நடைபெறும்.
ஆலய பரிபாலன சபையின் தலைவர் இராசையா ஜெகநாதன் தலைமையிலான பரிபாலன சபையினர் இதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.