மன்னார் சதொச மனித புதைகுழி ஒட்டுமொத்த அறிக்கை கிடைத்த பின்பே மீண்டும் அகழ்வு பணி தீர்மானிக்கப்படும்.

(வாஸ் கூஞ்ஞ)  மன்னார் சதொச மனித புதைகுழியை தற்பொழுது மீண்டும் அகழ்வு செய்வதை இடைநிறுத்தி இந்த மனித புதைகுழி அகழ்வுக்கு பொறுப்புவாய்ந்த அதிகாரி சொக்கோர் பொலிஸார் மற்றும் தொல்பொருள் அதிகாரியின் அறிக்கையை மன்றில் சமர்பித்தபின் இதன் பின்பே இப்புதைகுழி மீண்டும் அகழ்வு செய்வதா இல்லையா என திர்மானிக்கப்படும் என காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சார்பாக மன்றில் ஆஐராகிவரும் சிரேஷ்ட சட்டத்தரனி என வீ.எஸ்.சிவரஞ்சன் இவ்வாறு தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டு மன்னார் நகரில் சதொச கட்டிடத்துக்கான வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுது கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில்  தாக்கல் செய்யப்பட்ட வழக்கு புதன்கிழமை (05) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் விசாரனைக்கு எடுக்கப்பட்டது.
இன்றையத் தினம் இவ்வழக்கில் அரச தரப்பு சட்டத்தரனியும் சட்ட வைத்திய அதிகாரியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பாதிக்கப்பட்ட தரப்பினரின் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரனி வி.எஸ்.நிரஞ்சன்  காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகத்தின் (ஓஎம்பி) சார்பாக   சட்டத்தரனிகள் திருமதிகள் எஸ்.புராதினி மற்றும் சவ்னா மற்றும் இராணுவத் தரப்பு சட்டத்தரனி ஆகியோர் இவ்வழக்கில் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன் இது தொடர்பான திணைக்களங்களின் சில அதிகாரிகளும் முன்னிலையாகி இருந்தனர்.

இவ்வழக்குத் தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பாதிக்கப்பட்ட தரப்பினரின் சார்பாக முன்னிலையாகி வரும் சிரேஷ்ட சட்டத்தரனி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவிக்கையில்

மன்னார் சதொச மனித புதைகுழி வழக்கு பி232 புதன்கிழமை (05) மன்னார் நீதவான் நீதிமன்றில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது ஏற்கனவே அழைக்கப்பட்ட 27 திணைக்களங்களின் சார்பில் பலர் இன்றைய வழக்கில் பிரசனமாகி இருந்தார்கள்.

நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட வினாக்களுக்கு அமைவாக மன்னார் சதொச புதைகுழியில் எற்கனவே 376 மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் மீண்டும் தொடர்ந்து இவ்புதைகுழியை அகழ்வு செய்வதா இல்லையா என்ற கேள்வி இங்கு எழுப்பப்பட்டது.

அப்பொழுது ஒட்டுமொத்தமாக அனைவரின் இணக்கப்பாட்டுக்கு அமைவாக இந்த புதைகுழியில் காணப்படும் மனித எச்சங்களை தற்பொழுது அகழ்வு செய்யத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஒட்டுமொத்த அறிக்கை தேவை என்ற அடிப்படையிலும் இவர்களுக்கு நடந்தது என்ன அடுத்த நடவடிக்கை என்ன என்ற விளக்கங்களை சட்டவைத்திய அதிகாரி நீதிமன்றுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும்

காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக முன்னிலையாகி இருந்த சட்டத்தரனிகளின் கோரிக்கைக்கு அமைவாக இம்மனித புதைகுழியின் அகழ்வுக்கு பொறுப்பாயிருந்த சட்டவைத்திய அதிகாரி டபிள்யூ.ஏ.அர்.சீ.ராஜபக்ஷ தொல்பொருள் திணைக்களம் சார்ந்த பேராசிரியர் ராஜ்சோமதேவா மற்றும் பொலிசாரின் அறிக்கைகள் பெற்ற பின்பே இதன் தொடர்பாக இவ் புதைகுழி தொடர்ந்து அகழ்வுப் பணி தொடர்வதா அல்லது இல்லையா என்பது தீர்மானிக்க வேண்டி இருக்கின்றது. எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே அகழ்வுச் செய்யப்பட்ட மனித எச்சங்கள் நீதிமன்ற காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவைகளில் மனித எச்சங்கள் வேறாகவும் ஏனையப் பொருட்கள் வேறாகவும் தரம் பிரிக்க வேண்டிய தேவையும் இருக்கின்றது. என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் பிற்பாடுதான் அறிக்கைகள் சமர்பிக்க வேண்டியும் உள்ளது. ஆகவே சட்டவைத்திய அதிகாரி இது தொடர்பாக அறிக்கை ஒன்று சமர்பிக்குமாறு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கு செப்டம்பர் மாதம் 12 ந் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு மன்னார் நகரில் சதொச கட்டிடத்துக்கான வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுது இதிலிருந்து அகற்றப்பட்ட மணல் ஒரு ஆசிரியரின் வீட்டில் பறிக்கப்பட்டபோது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து இவ் கட்டிட வேலை இடைநிறுத்தப்பட்டு மனித எச்சங்களுக்கான அகழ்வு வேலைகள் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் முன்லையில் இடம்பெற்று வந்த நிலையிலேயே இவ் வழக்கு விசாரனைக்கு அழைக்கப்பட்டுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது.