மீண்டும் மாளிகைக்காட்டில் உக்கிரமான கடலரிப்பு

காரைதீவு பிரதேசத்திற்குட்பட்ட மாளிகைக்காடு கிராமத்தில் மீண்டும் மிகவும் உக்கிரமான கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.

மாளிகைக்காட்டில் ஏற்பட்ட கடலரிப்பின் காரணமாக கடற்கரை மிக வேகமாக பாதிக்கப்பட்டு அண்மித்த கட்டிடங்களும் தென்னை மரங்களும் மீன் வாடிகளும் மையவாடியும் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இது விடயமாக மீனவர் அமைப்புக்கள் மற்றும் மாளிகைக்காடு கிழக்கு வட்டார முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் எம்.எச் நாஸர் ஆகியோர் இதனைத் தடுக்க நடவடிக்கை கலந்துரையாடி வருகின்றனர்.