பாடசாலை கீதப்போட்டியில் முதலியத்தை தட்டிய பட்டிருப்பு மகா வித்தியாலயம்

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை)களுவாஞ்சிகுடி ,பட்டிருப்பு வலயத்திற்குட்பட்ட 1AB பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற பாடசாலை கீதப்போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

வெற்றிபெற்ற மாணவர்களையும் மாணவர்களை வழிப்படுத்திய ரவிதா,சசிகுமார் ,சந்திரலதா,மதியழகன் ஆகிய ஆசிரியைகளையும் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.சபேஸ்குமார் தலைமையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது .

இந்நிகழ்வில் பிரதி அதிபர் , உதவிகரமாக அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் கல்விசாரா உத்தியோஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இப் போட்டியில் செட்டிப்பாளையம் மகா வித்தியாலயம் இரண்டாம் இடத்தையும், களுதாவளை மகா வித்தியாலயம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.