முன்னாள் ஜனாதிபதியால் சப்பாத்து வழங்கி வைப்பு

கோண்டாவில் இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் தேவைப்பாடுடைய மாணவர்கள் சிலருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சப்பாத்துக்களை வழங்கி வைத்திருந்தார்.

சுதந்திரக் கட்சியினுடைய யாழ்ப்பாண அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பினைத் தொடர்ந்து மேற்படி உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மைத்திரிபால சிறிசேன கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட வேளையில் அங்கு மாணவர்கள் சிலர் கிழிந்த காலணிகளுடன் வந்ததனை அவதானித்த நிலையில் இந்த உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட சுதந்திரக்கட்சியினுடைய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.