சுற்றுலாத் துறை சங்கத்துக்கு களங்கம் ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்காமை கவலையளிக்கிறது

திருகோணமலை நிலாவெளி கரையோரம் தொடக்கம் சுற்றுலா துறை பகுதியான புறா தீவுக்கு சுமார் 20 வருடமாக படகு சேவையை மூவினமும் இணைந்து தங்களது வாழ்வாதாரத்தை இதன் மூலமே வருமானமாக பெற்று வரும் நிலையில் அண்மையில் இட்டுக்கட்டப்பட்ட போலியான வீடியோவை சமூக வலைத்தளத்தில் பரப்பி தங்களது சங்கத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தியவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமை கவலையளிக்கிறது என நிலாவெளி உல்லாச பிரயாணிகளின் படகு மற்றும் சேவை கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.முபீன் தெரிவித்தார்.

திருகோணமலையில் நேற்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துரைக்கையில்

சுற்றுலாத் துறை மூலமாக வெளிநாட்டு சுற்றுலாத் துறை பயணிகளை மிகவும் அன்பாகவும் பண்பாகவும் வழிநடாத்தி எங்களது தொழிலை முன்னெடுத்து வரும் நிலையில் முன்னால் வனஜீவராசி திணைக்கள அதிகாரி ஒருவர் தனது மனைவின் பெயரில் பாஸ் ஒன்றை வைத்து படகு சேவையை முன்னெடுப்பதுடன் தங்களுக்கு எதிராக போலியான இட்டுக்கட்டப்பட்ட வீடியோவை வெளிநாட்டுப் பயணியை வைத்து எடுக்கப்பட்ட நிலையில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி அபகீர்த்தி ஏற்படுத்தியுள்ளார் இதனை வன்மையாக கண்டிப்பதுடன் இது தொடர்பில் குச்சவெளி பொலிஸ் ,பிரதேச செயலகம்,வனஜீவராசி திணைக்களம் ,மாவட்ட செயலாளர் உள்ளிட்டவர்களுக்கு முறைப்பாடுகளை பதிவு செய்து கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும் எவ்வித நடவடிக்கையும் இற்றை வரைக்கும் எடுக்கப்படாமை கவலையளிப்பதுடன் பெரும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.

20 வருட காலமாக எங்களது வாழ்வாதாரம் சுற்றுலாப் பயணிகளுக்கான படகு சேவையாகும் புறா தீவுக்கான சேவையினை முன்னெடுக்கிறோம் இதன் மூலமாக 150 குடும்பங்கள் நம்பி வாழ்கின்றன. இத் தொழிவை நம்பியே வாழ்கின்றோம் பிள்ளைகளை பாடசாலைகளுக்கும் அனுப்புவதுடன் பொருளாதார கஷ்டங்களையும் எதிர்நோக்குகிறோம் இவ்வாறானவற்றை வீடியோவை வைத்து எமக்கு களங்கத்தை ஏற்படுத்தி தொழிலை நாசமாக்க முனைகின்றனர் இந்த பிரச்சினை மூன்று மாத காலமாக தொடர்கிறது எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை தீர்வின்றிப் போனால் அனைவரும் ஒன்று பட்டு பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்து பின் விளைவுகளை எடுக்க நேரிடும் இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனத்திற் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.