ஜனாதிபதியிடம் இருந்து மதுபான விற்பனை அனுமதியை பெற்றுள்ள ஐ.மக்கள் சக்தியினர்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து மதுபான விற்பனை நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சகல தகவல்களையும் நான் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் வழங்கியுள்ளேன்.

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுடன் இரவு நேர களியாட்ட விடுதிகளில் மதுபானம் அருந்தும் புகைப்படங்கள் கூட என்னிடம் இருக்கின்றன.

இந்த குழுவினர் இரண்டு பக்கத்திலும் கால்களை வைத்துக்கொண்டு சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களில் பெயர்களை வெளியிட்டு வானத்தை நோக்கில் எச்சில் துப்ப முடியாது.

சஜித் பிரேமதாச மிகவும் நம்பிய, ஹரின் பெர்னாண்டோ, டயனா கமகே, மனுஷ நாணயக்கார, பீ.ஹெரிசன் ஆகியோர் சஜித்தை கைவிட்டு ரணிலுடன் இணைந்துக்கொண்டனர் எனவும் ஹிருணிகா பிரேமச்சந்திர மேலும் தெரிவித்துள்ளார்.