கட்டார் விமான சேவையில் இலங்கையர்களுக்கு புதிய தொழில்வாய்ப்பு

கட்டார் விமான சேவை நிறுவனமானது விமான பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்களை இணைத்துக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி வரை இதற்காக விண்ணப்பிக்க முடியுமென்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கையர்களும் குறித்த வேலைவாய்ப்புக்களுக்கு விண்ணப்பிக்க முடிவும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

விண்ணப்பிப்பதற்கான ஆகக் குறைந்த வயது எல்லை 21ஆக இருப்பதுடன் விண்ணப்பதாரி ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் உயர் கல்வியைக் கற்றவர்கள், ஆரோக்கியமானவர்கள், சிறந்த திறமைகளைக் கொண்டவர்கள் இந்த பதவிக்கு தகுதியுடையவர்களாக கணிக்கப்படுவர் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தொழில்வாய்ப்பு தொடர்பான விண்ணப்பங்களை https://careers.qatarairways.com/global/en/job/230000A5/Cabin-Crew-Recruitment-Colombo-Sri-Lanka-2023 என்ற இணைதளம் ஊடக பெற்றுக்கொள்ள முடியும்.