பயணிகள் போக்குவரத்து தொடர்பில் புதிய தடை அறிவிப்பு

அரை சொகுசு பயணிகள் போக்குவரத்து பஸ் சேவை இரத்து செய்யப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மாத்திற்கு அமைய குறித்த தடையானது இன்றுமுதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இச்சேவைக்காக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்களை இன்றிலிருந்து வேறு சேவைக்கு மாற்றியமைக்குமாறு சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் அறிவித்துள்ளது.

இதேவேளை, இந்த வருடம் பஸ் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் குறித்த ஆணைக்குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.