வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்கு அண்மையில் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி கோரி கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இப் போராட்டம் இடம்பெற்றது.

‘கறுப்பன் சுரேஸ், 1996.06.10 அன்று பகல் 12.30 மணியளவில் மீன் பிடித்தொழிலுக்கு சென்று வரும் வேளை கொழும்புத்துறை சந்தியில் வைத்து இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.

கறுப்பன் பாலகிருஷ்ணன், 996.07.14 அன்று பகல் 3.00 மணியளவில் துண்டிச் சந்தியில் வைத்து இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்’ போன்ற பதாகைகளையும், காணாமல் காணாமலாக்கப்பட்டோரின் புகைப்படங்களையும் ஏந்தியவாறு உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.