யாழில் மக்களோடு மக்களாக அமர்ந்து உணவு சாப்பிட்ட மைத்திரி

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா யாழ். நகரில் உள்ள சைவ உணவகமொன்றில் உணவருந்தி உள்ளார்.

மூன்று நாள் விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மதியம் யாழ். நகரில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் மக்களுடன் மக்களாக அமர்ந்து சைவ உணவை உண்டுள்ளார்.

தொடர்ந்து உணவகத்தில் உணவு உண்பதற்காக வருகை தந்தவர்களுடன் சினேகபூர்வமாக கலந்துரையாடியதுடன், முன்னாள் ஜனாதிபதியுடன் உணவகத்தில் நின்றவர்கள் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் உடனிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.