அமேரிக்க அரசியல் அதிகாரிக்கும் மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கும் இடையில் சந்திப்பு

அமெரிக்க தூதரக அரசியல் அதிகாரியும் இரண்டாவது செயலாளருமான மெதீவ் ஹின்சன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவுக்கும் இடையலான சந்திப்பு இன்று (28) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது மாவட்டத்தில் போதைப் பொருள் பவனையினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும் அதன் விளைவாக சமுகத்தில் ஏற்பட்டு சீர்கேடுகள் அவற்றை நிவர்த்திப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மேலும் போதைப்பொருள் பாவனையினைக் கட்டுப்படுத்தவும், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வழிக்கவும் மாவட்டத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் கருத்துத் தெரிவிக்கப்பட்டதுடன் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்துழைப்பினை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டு திட்ட முன்மொழிவும் கையளிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் அமெரிக்க தூதரக அரசியல் நிபுணர் சரித்த பெனான்டோ, மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், உளநல வைத்திய நிபுணர் டாக்டர் டான் சௌந்தரராஜன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் உள்ளிட்ட மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.