கலாநிதி பாபு சர்மாவிற்கு கௌரவ போஷகர் நியமனம்

முன்னாள் ஜனாதிபதியின் இந்து மத விவகார இணைப்பாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா க்கு கௌரவ போஷகர் நியமனம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சாம ஸ்ரீ கௌரவ விருது வழங்கும் நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஒக்கிட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போதே இக் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

இவ் விழாவில் நாட்டுக்காக சேவை செய்த பல சமூக பிரமுகர்கள் சாம ஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர். விழாவில் முன்னாள் ஜனாதிபதியின் இந்து மத விவகார இணைப்பாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா இன நல்லுறவு ஒன்றியத்தினால் அதன் கௌரவ போஷகராக நியமிக்கப்பட்டு பாராட்டு பத்திரமும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.