மட்டக்களப்பு மாவட்ட காத்தான்குடி பிரதேச தினக் கலந்துரையாடல் பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் (26) இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் பிரதேச அபிவிருத்தி மற்றும் தற்போது இடம்பெறும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக திணைக்களங்கள், சபைகள் ரீதியாக ஆராயப்பட்டன.
கல்வி, சுகாதாரம், நகர சபை, நீர் வழங்கல், மின்சார சபை, ஆதார வைத்தியசாலை போன்ற பல நிறுவனத் தலைவர்கள் பொறுப்பதிகாரிகள் பங்கேற்று, தற்போது மேற்கொள்ளும் வேலைத்திட்டங்கள் குறித்துக் கருத்து தெரிவித்தனர்.
இக்கலந்துரையாடலில் உதவிப்பிரதேச செயலாளர் எம். எஸ் சில்மியா, கிராம நிருவாக உத்தியோகத்தர் எம். எம். ஜரூப், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா, கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி, அபிவிருத்தி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.