கிழக்கு மாகாண தமிழ் ஆசிரியர் சங்கத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அதிகஸ்ட பாடசாலையான கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்திற்கு பிளாஸ்ரிக் கதிரைகள் சனிக்கிழமை(24) வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண தமிழ் ஆசிரியர் சங்கத்தின் பூரண அனுசரணையுடன் சிறுவர் வறுமை நிவாரண நிதியம் என்ற அமைப்பினூடாக பாடசாலையில் அமையப்பெற்றுள்ள தற்காலிக நூலகத்திற்கு இருபத்தைந்து பிளாஸ்ரிக் கதிரைகளே இவ்வாறு கையளிக்கப்பட்டன.
குறித்த உதவியை, கிழக்கு மாகாணக்கல்வி பணிப்பாளர் அகிலா கனகசூரியம், கிழக்கு மாகாண தமிழ் ஆசிரியர் சங்க தலைவர் எ.பிரியகாந்தன். பொருளாளர் க.சண்முகநாதன் கிழக்குமாகாண ஆசியர் சங்கத்தின் பிரச்சார செயலாளரும் ஊடகப் பேச்சாளருமான அ.ரமணன், அதன் மாவட்ட செயலாளர் தி.கிருபாகரன், சிறுவர் கல்வி மேம்பாட்டு நிதியத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பெ.புவனசுந்தரம், செயற்பாட்டாளர், சிவானந்தராஜா ஆகியோர் கலந்துகொண்டு பாடசாலையின் அதிபர் வ.துசாந்தன், ஆசிரியர் க.சந்திரகுமார், மாணவர்கள் ஆகியோரிடம் கையளித்தனர்.