கல்முனையில் அன்றாட கூலித் தொழிலாளிகளுக்கு நல்ல கிராக்கி.

கல்முனை பிராந்தியத்தில்  அன்றாடம் உழைக்கும் கூலித் தொழிலாளர்களுக்கு   நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளதோடு சகலதுறை தொழில்களுக்குமான  வேலையாட்களை ஒரே இடத்தில்.பெறும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
வீடு விவசாயம்.கட்டிடம்  வீட்டுவேலை
தொடக்கம் ஏனைய தொழில்களுக்கு
பொதுமக்கள் தேடியலையும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கல்முனை மட்டக்களப்பு
பிரதான வீதி அருகே
பிரசித்தி பெற்ற கல்முனை கொடியேற்ற வீதி  முன்றலில் அதிகாலை வேளையிலே தொழிலாளர்கள் அங்கு கூடிவிடுகின்றனர்.
 தேவையான இடத்துக்கு தேவையான தொழிலாளர்கள்.அங்கிருந்தே அழைத்துச் செல்லப்படுகின்றனர்
தொழிலாளர்களிடம் அன்றாட. வருமானம் தொடர்பாக கேட்டபோது கிடைக்கும் வருமானம் தினச்செலவுக்கே போதாத நிலையில்
எப்படி சேமிக்க முடியும் என்றனர்.