ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!!

(கல்லடி செய்தியாளர்) முறைமையின் நலன்புரி திட்டத்தின் கீழ் சமூர்த்தி பயனாளிகளின் முத்திரைகள் வெட்டப்படுள்ளது. இதனையடுத்து சமூர்த்திப் பயனாளிகள் ஆரையம்பதிப் பிரதேச செயலகத்திற்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை (22) ஆர்ப்பாட்டத்தில் இறங்கியதையடுத்து. பதற்ற நிலை ஏற்பட்டது.

அதன் பின்னர் வெட்டப்பட்ட சமூர்த்தி பயனாளிகளுக்கு விண்ணப்பபடிவம் கொடுக்கப்பட்டது.

மேற்படி ஆரையம்பதி செல்வாநகர் =கிழக்கு பிரிவில் 300 சமூர்த்தி பயனாளிகளுக்கு முத்திரைகள் வெட்டப்படுள்ளது.

உங்களது முத்திரை வெட்டப்பட்டுள்ளதா என அறிய QR படிவத்தை கொண்டு சென்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். வெட்டப்பட்ட பயனாளிகள் அருகில் உள்ள பிரதி நிலையத்திற்கு சென்று விண்ணப்பபடிவத்தை எடுத்து நிரப்பிக் கொண்டு செல்லுங்கள். மேலதிக தகவல் அங்கு தரப்படும் என அதிகாரிகளால் இதன்போது கூறப்பட்டது.

க.கிருபாகரன்
கல்லடி செய்தியாளர்