திருகோணமலை மாவட்ட ஹோட்டல் வலையமைப்பு அமைப்பு அங்குரார்ப்பணம்

திருகோணமலை மாவட்ட ஹோட்டல் வலையமைப்பு அங்குரார்ப்பண வைபவம் நேற்று (21) திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம் பெற்றது.

கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் ஏ.பி.மதனவாசன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் சுற்றுலாத் துறை விருத்தி மற்றும் குறித்த வலையமைப்பை பதிவு செய்வதன் ஊடாக திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத் துறை தொழில்வாண்மையான துறைகளில் முன்னேற்றம் காண்பது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதில் தலைவராக திருப்பதி துறையும்,செயலாளராக எஸ்.சக்தீபன்,பொருளாளராக எஸ்.பிரியதர்சினி உட்பட ஏனைய நிருவாக குழு உறுப்பினர்கள்,ஆலோசனை குழு என தெரிவுகள் இடம் பெற்றது.இதில் மாகாண சுற்றுலா பணியக பொது முகாமையாளர் டாக்டர் ஞானசேகரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.